நல்லிணக்க முயற்சியை ஓர் வெற்றியான நடவடிக்கையாக்கி முன்னேற்றகரமானதும் ஐக்கியமானதுமானதும் சமூக பொருளாதார அபிவிருத்தியின் புதிய உயர்வுகளை நோக்கி எமது நாட்டு மக்களை இட்டுச் செல்வதற்காக இணக்கத்துடன் செயலாற்ற முடியுமென்பதில் பலமான நம்பிக்கை இலங்கை கொண்டுள்ளது.
ஜெனீவா, மனித உரிமைகள் பேரவையில் 34 வது அமர்வில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ த சில்வா நிகழ்த்திய உரையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ த சில்வாவின் உரை பின்வருமாறு:
திரு. தலைவர் அவர்களே!
உயர் ஆணையாளர் அவர்களே!
பிரதி உயர் ஆணையாளர் அவர்களே!
மேன்மைதங்கியோர்களே!
அம்மணிகளே! கனவான்களே!
நான் உயர் ஆணையாளரினால் அவருடைய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமைக்காக அவருக்கு நன்றி கூற விரும்புகின்றேன். அந்த அறிக்கையில் சம்பந்தப்பட்ட காலப்பகுதியில் இலங்கையினால் எய்தப்பட்ட அநேக சாதனைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு மங்கள சமரவீர அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இச்சபையில் பெப்புருவரி 28 ஆந் திகதியன்று உரை நிகழ்த்தி அந்த உரையில் 30ஃ1 ஆம் தீர்மானத்திற்கு அமைவாக நாம் எய்தியுள்ளவைகளும் அவற்றிற்கு அப்பாலும் எய்தியுள்ளவைகளுமான முன்னேற்றங்களைப் பற்றியும் இன்னும் எய்துவதன் பொருட்டு எஞ்சியுள்ளவைகளுமான முன்னேற்றங்களைப் பற்றியும் இந்த நடைமுறையில் நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றவைகளுமான சவால்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மிகவும் முக்கியமாக நல்லிணக்க நடைமுறை மங்காமலிருப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் மன உறுதியைப் பற்றி வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையின் சகல துறைகளிலும் உள்ள எமது சகல பிரஜைகளினதும் சருவதேச சமூகத்திலுள்ள எமது நண்பர்களினதும் பங்காளர்களினதும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களினதும் உதவியுடனும் பொறுமையுடனும் புரிந்துணர்வுடனுமான நிலையானதும் தளராததுமான ஊக்கம் மற்றும் விடா முயற்சி அகியவற்றுடன் நல்லிணக்க முயற்சியை ஓர் வெற்றியான நடவடிக்கையாக்கி முன்னேற்றகரமானதும் ஐக்கியமானதுமானதும் சமூக பொருளாதார அபிவிருத்தியின் புதிய உயர்வுகளை நோக்கி எமது நாட்டு மக்களை இட்டுச் செல்வதற்காக இணக்கத்துடன் செயலாற்ற முடியுமென்பதில் பலமான நம்பிக்கை கொண்டுள்ளோம்.
நான் 30ஃ1ஆம் தீர்மானத்தின் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள நல்லிணக்க நடைமுறை மற்றும் பொறுப்பேற்புகளை நிறைவேற்றுவதற்கான எமது உறுதிப்பாட்டை வலியுறுத்துவதற்கும் எமது பொறுப்பேற்பை உறுதிப்படுத்துவதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்புகின்றேன்.
இலங்கை ஐக்கிய அமெரிக்க நாடுகளுடனும் 30ஃ1 ஆம் தீர்மானத்தின் ஏனைய பிரதான இணை அனுசரணையாளர்களாகிய ஐக்கிய இராச்சியம், மசிடோனியா மற்றும் மொன்ரிநீகுரோ ஆகியவற்றுடனும் சேர்ந்து 30ஃ1 ஆம் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொறுப்புகளைப் பூர்த்திசெய்வதற்கான கால எல்லை இரண்டு ஆண்டுகளினால் நீடிக்கப்படுவதற்கான தீர்மானமொன்றின் மீது பணியாற்றிக் கொண்டிருந்தமை பற்றி இச்சபைக்குத் தெரியும். இலங்கை இத்தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமென்பதை அறிவிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோமென்பதுடன், இலங்கையில் நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதற்காகத் தங்களுடைய ஆதரவை வழங்குகின்றமைக்காகவும் இக்கால எல்லையை நீடிப்பதற்காகவும் நாம் இச்சபைக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் எமது இருதரப்புப் பங்காளிகளுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
30ஃ1ஆம் இலக்கத் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்தினால் வழிநடாத்தப்பட்டவைகளும் நிறைவேற்றப்பட்டதுமான நம்பகத்தன்மை வாய்ந்தவைகளுமான நடைமுறைகளில் 2015 ஆம் ஆண்டில் அரசாங்கத்தினால் செய்யப்பட்ட முன்மொழிவுகளுக்கு இணக்கம் தெரிவித்தமைக்காகவும் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளின் நடைமுறையில் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் உறுதியான பொறுப்பேற்பை அங்கீகரித்தமைக்காகவும் நாம் இச்சபையை விசேடமாக பாராட்டுகின்றோம்.
தலைவர் அவர்களே!
நாம் உயர் ஆணையாளருடனும் அவருடைய அலுவலகத்துடனும் நெருக்கமாகப் பணியாற்றுகின்றோம் என்பதுடன் நாம் எமது மக்கள் அனைவரினதும் நலனுக்காக இந்த ஆக்கபூர்வமானதும் அர்த்தமுள்ளதுமான பணியில் ஈடுபட்டுள்ளோம். நாம் இலங்கையில் மனித உரிமைகளையும் நல்லாட்சியையும் சட்ட ஆட்சியையும் பலப்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் கருமமாற்றுகின்ற வேளையில் உயர் ஆணையாளரின் கருத்துக்களும் அவதானிப்புரைகளும் சிபாரிசுகளும் பயனுள்ளவைகளாகவுள்ளன.
எந்த நாட்டினதும் மனித உரிமைகளின் பதிவு பூரணமானதாகவில்லாமலிருப்பது என்பது இச்சபைக்குத் தெரிந்த விடயமாகும். இலங்கை மக்கள் மிகவும் கஷ்டமானவைகளும் துயரமானவைகளுமான காலப்பகுதிகளில் வதிந்துள்ளனர். அவர்களின் விடயத்தில் பெருமளவு நற்பணிகள் புரியப்பட்டுள்ளன. அத்துடன் எமது நிறுவனங்களைப் பலப்படுத்துவதற்கும் பொருளாதார முன்னேற்றத்தை எய்துவதற்குமாக இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டிய பெருமளவு நற்பணிகளும் உள்ளன. நாம் அநேக சவால்களையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஆனால் சனாதிபதி சிறிசேன அவர்களினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினதும் தலைமைத்துவத்தின் கீழுள்ள ஓர் அரசாங்கமாக நாம் இவற்றை நிறுத்திவைத்து முன்னேறுவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளோம். நாம் அனைவரினதும் பிரச்சினைகளைச் செவிமடுத்து சகல அறிக்கைகளையும் கவனமாக ஆய்வு செய்வோமென்பதுடன் நாம் தகவலக்ளைப் பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் எமது கரிசனைகள் மற்றும் கருத்துரைகளைப் பகிர்ந்து கொள்ளுதல், எமது பங்காளர்களுடன் ஆக்கபூர்வமாகவும் அர்த்த ரீதியாகவும் ஈடுபடுதல் ஆகியவற்றை மேற்கொள்வதுடன் வளமானதும் பல்வகைமையிலும் ஐக்கியமாகவிருத்தல், மனித உரிமைகளையும் நீதியையும் சட்ட ஆட்சியையும் நிலையாகக் கடைப்பிடித்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும் மக்களைக் கொண்டவொரு நாடாக இலங்கையை ஆக்கி உறுதிப்படுத்துவதற்குத் தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம்.
நாம் சகல பிரஜைகளையும் சுதந்திரமானதும் சனநாயகமானதுமானவொரு நாட்டிலுள்ளவர்களாக்கி அந்நாட்டில் பயத்திற்கும் பயமுறுத்தலுக்கும் இடமின்றி அவர்களின் அடிப்படை உரிமைகளை அதிகரிப்பதற்கான எமது மன உறுதிப்பாட்டில் உறுதி கொண்டவர்களாகவுள்ளோம். நாம் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட அணுகுகையுடன் உண்மை, ஈடுசெய்தல், நீதி மற்றும் வன்செயல் அழிவுகள் மீள நிகழாமை ஆகியவற்றை அவர்களுடைய மூலத்தோற்றம், பல்லின சமூகத்தவர்கள் அந்தஸ்து, வயது மற்றும் ஏனைய அடையாளங்களைக் கவனியாமல் எமது சகல பிரசைகள் மீதுமான மோதலின் தாக்கத்தை ஏற்றுக் கொண்டு நல்லிணக்க நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பேற்பைக் கொண்டுள்ளோம்.
புதிய பொறிமுறைகளை நிறுவும் சிக்கலான நடைமுறைக்கு ஊடாக நாம் செல்லும்போது நாம் கலந்துரையாடல் சிறப்புப் பணியணியின் அறிக்கையையும் ஆராய்ந்து கொண்டிருப்பதுடன் நாம் எமது சமூகத்தின் சகல பிரிவினர்களுடனும் கலந்துரையாடலைத் தொடர்ந்தும் செய்து கொண்டிருப்போம். நாம் இத்தகைய பொறுப்புக்களைப் பொறுப்பேற்கும் போது சகல நாடுகளும் செய்வதைப் போல சருவதேச நிபுணத்துவத்தையும் உதவியையும் நாடுவோம்.
நாம் நல்லிணக்க நிகழ்ச்சி நிரலின் வெற்றியை உறுதிப்படுத்துவதில் முக்கியமான பாகத்தை வகிக்கும் பொருளாதார அபிவிருத்தியையும் உள்ளடக்கி பொறுப்பேற்றுக் கொண்ட இந்த உருமாற்றமானதும் சவாலுள்ளதுமான நிகழ்ச்சி நிரலில் வெற்றியடைவதற்கு இலங்கைக்கு உதவி நல்குமாறு இச்சபையின் சகல அங்கத்தவர்களினதும் அவதானிப்பாளர்களினதும் ஆதரவை நாடுகின்றோம்.