நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கிரிஷ் கொடுக்கல் வாங்கல் ஊடாக 70 மில்லியன் மோசடி இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
நிறைவு செய்யப்பட்ட விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பிலான சட்டமா அதிபரின் ஆலோசனை இன்னமும் கிடைக்கவில்லை என பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது.
அதற்கமைய கொழும்பு கோட்டை மேலதிக மாவட்ட லங்கா ஜயரத்னவினால் சட்டமா அதிபருக்கு நினைவூட்டல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் ராஜபக்ச ஆட்சி காலத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் 70 மில்லியன் பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்சவுக்கு எதிராக நிதி மோசடி விசாரணை பிரிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.