பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் ஆஜராகி உள்ளார்.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காகவே மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 16ம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அவர் அன்றைய தினம் முன்னிலையாகவில்லை.
2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்தவின் சார்பாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தில் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் ஒளிபரப்புச் செய்யப்பட்டன. அதற்கான கட்டணங்கள் இதுவரை செலுத்தப்படவில்லை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அது தொடர்பாக விசாணை நடத்தவே மஹிந்த இன்று ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளார்.