ஸ்ருதி ஹாசன் ஓப்பனா பேசுவாரு..ஆனால், இவ்வளவு ஓப்பனா நினைச்சே பார்க்கலை. எப்படி நடிக்க வந்தீங்கன்னு கேட்டதுக்கு,” கையில காசு இல்லைன்னு நடிக்க வந்தேன். என் ரத்தத்தில் எல்லாம் நடிப்பு ஓடலை. டைரக்டரா ஆகணும்ன்னு நினைச்சேன். அப்புறம் இசை என்னை இழுத்துக்கிச்சு.அப்புறம் பணம் வேணும்ன்னு நடிக்க ஆரம்பித்தேன்.” ன்னு சொன்னார்.
அடடே, உலக நாயகன் பொண்ணா…இது? இவ்வளவு ஒப்பன்னா பேசுறாரேன்னு ஆச்சரியப்பட்டு, உங்க குரல் ரொம்ப தனித்தன்மையா இருக்கேன்னு? கேட்டதுக்கு அதிர்ச்சியான பதிலை தந்தார்.
“சின்ன வயசில, சளிபிடிச்ச தொண்டை போல இருக்குன்னு என் குரலை சொல்லுவாங்க. நான் பேசுறதுக்கும், பாடுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.
மர்லன் பிராண்டோவிடமிருந்து தான் குறிப்பை பெற்றுக்கொண்டேன்.” என்று பதில் சொல்லி இருக்கிறார்.
உங்கப்பா கமல் ஏதோ, அரசியலுக்கு வர்றாராமே? “ன்னு கேட்டதுக்கு,’ சான்ஸ் இல்லை. அவர் பேச்சுரிமையை பிராக்டிஸ் பண்ணுறார். அவருக்கு ஸ்ட்ராங் சமூக பொறுப்பு இருக்கு. நான் என் கருத்துக்களை சொல்ல பயப்படுவேன். நாம நம்பறதை பேச தைரியம் வேணும்” என்று சொல்லியுள்ளார்.
பட், உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு!