Loading...
கேரட்டில் பீட்டா கரோட்டீன், புரோட்டீன், கார்போ ஹைட்ரேட்ஸ், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் விட்டமின் A போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது.
எனவே கேரட் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.
Loading...
கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்தால், அது நமது உடம்பில் தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, உடல் முழுவதையும் சுத்தமாக்குகிறது.
- கேரட் ஜூஸ் ஆர்த்ரிடிஸ், மோசமான செரிமானப் பிரச்சனை, வாய்வுத் தொல்லை, மலச்சிக்கல் மற்றும் மூல நோய் போன்ற பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
- தினமும் கேரட் ஜூஸை குடிப்பதன் மூலம், அளவுக்கு அதிகமான வேலைச்சுமை மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் மனச்சோர்வில் இருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
- கேரட் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், சோர்ந்துள்ள இதய தசைகள் தளர்வடைவதுடன், உடல் எடை அதிகரிக்காமல் சீராக பராமரிக்க உதவுகிறது.
- கேரட்டில் உள்ள விட்டமின் சத்துக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, இரைப்பை, கல்லீரல், இதயம் மற்றும் கண் பார்வையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- வயிற்றில் சுரக்கப்படும் அதிகப்படியான அமிலத்தில் இருந்து விடுபட தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் கேரட் ஜூஸைக் குடிக்க வேண்டும்.
குறிப்பு
கேரட் ஜூஸை நீர் சேர்க்காமல் அரைத்து வடிகட்டி, காலை உணவிற்கு முன் 30 மிலி அளவு வாயில் ஊற்றி விழுங்கும் முன் சில நொடிகள் வாயில் வைத்து பின் குடிக்க வேண்டும்.
Loading...