Loading...
தாய்நாடு மிகவும் அராஜ நிலைமைக்கு சென்றுள்ளதாகவும் இதனால், நாட்டை காப்பாற்ற பௌத்த பிக்குகள் நாட்டின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
Loading...
நாடு அராஜக நிலைமைக்கு சென்ற சகல சந்தர்ப்பங்களிலும் அதில் இருந்து நாட்டை பௌத்த பிக்குமாரே காப்பாற்றினார்.
நாட்டுக்கு நேசிக்கும் மன்னர்களை உருவாக்க பௌத்த பிக்குகளுக்கு வரலாற்றில் வழங்கப்பட்டுள்ள பொறுப்பில் இருந்து அவர்கள் விலகிச் செல்ல முடியாது எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...