அறிமுக இயக்குனர் ரத்தன் லிங்கா இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘அட்டு’. இப்படத்தில் ரிஷி ரித்திக், அர்ச்சனா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் ஐகான பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.அன்பழகன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ உரிமையை ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9 மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை அருமையாக படம்பிடித்துள்ள ‘அட்டு’ படம் வருகிற மார்ச் 31-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. அனைத்துவிதமான ரசிகர்களையும் கவரும்படியும், விறுவிறுப்பாகவும் இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இப்படத்தின் ஆடியோ மற்றும் டீசர், டிரைலர்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளது. ‘அட்டு’ படத்திற்கு ‘போபோ’ சசி இசையமைத்துள்ளார். இவர் ‘குளிர் 100’ என்ற படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.