பொதுவாக நம் ஆசிய நாடுளில் ஆண் குழந்தை வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் உள்ளது.
இது குறித்து நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்தும் உறுதியான பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புள்ளது உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பெண்களின் கருப்பையில் டெஸ்டோடீரோன் ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும். இதனால், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அதிகமாக வாய்ப்பு ஏற்படுகிறது.
பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை நிர்ணயிப்பதில் ஆண்களின் உயிரணுவில் உள்ள குரோமோசாம்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது.
“எக்ஸ்” குரோமோசோம் கொண்ட உயிரணுவால் பெண் குழந்தையும், “ஒய்” குரோமோசோம் கொண்ட உயிரணுவால் ஆண் குழந்தையும் உருவாகும்.
எனவே, கருப்பையில் டெஸ்ட்டோஸ்டீரோன் ஹார்மோன் அதிகமிருந்தால் “ஒய்” குரோமோசோம் கொண்ட உயிரணுதான் பெண்ணின் கருமுட்டையை எளிதில் அடைய முடிகிறது.
இதனால் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு மேற்படி பெண்களுக்கு அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகவவே, இயற்கையிலேயே நல்ல ஆளுமை மற்றும் உறுதியான குணநலன்களைப் பெற்றுள்ள பெண்களுக்கு இந்த ஆய்வு முடிவுகள் பொருந்தும்.