முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நேற்றைய தினம் தனது 68வது பிறந்த நாளை கொண்டாடினார். இதன்போது மஹிந்த ராஜபக்சவின் வாழ்த்தினை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் இறப்பு தொடர்பிலான அனுதாப யோசனை கலந்துரையாடப்பட்ட சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதில் இணைந்துக் கொண்டு கருத்து வெளியிட்டிருந்தார்.
பிரதமருக்கு பின்னர் ரத்னசிறி விக்ரமநாயக்க தொடர்பில் மஹிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டிருந்தார்.
அனுதாபம் வெளியிட்டதன் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறி விட்டு மஹிந்த தனது ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.