Loading...
வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்றஉறுப்பினர் விமல் வீரவன்ச இன்று நான்காவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விமல் வீரவன்சவின் உடல் நிலை குறித்து வைத்தியர்கள் நேற்று இரவுபரிசோதித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மஉதேசாந்த தெரிவித்துள்ளார்.
Loading...
விமல் வீரவன்சவின் உயிர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அதனால், அவர்தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பத்ம உதேசாந்தஅரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, விமல் வீரவன்சவின் பிணை கோரிக்கை மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஏப்ரல்மாதம் 03ம் திகதி வழங்கப்படவுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் நேற்றுஅறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...