யாருக்கு தான் போதிய செல்வத்துடன் சந்தோஷமாக இருக்க விருப்பமிருக்காது. இந்த வாழ்க்கைக்காகத் தான் நாம் அவ்வளவு பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும், பலரது வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாகத் தான் இருக்கிறது. இதற்கு நாம் செய்யும் பல தவறுகளும் முக்கிய காரணம். குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தவறுகளை செய்யும் போது, அது ஒருவரை நோக்கி துரதிர்ஷ்டத்தையும், வறுமையையும் தான் கொண்டு வரும். அவை என்னவென்று தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சுடுகாட்டில் உள்ள இறந்த நபரின் எலும்புகளைத் தொட்டால், அது தொட்டவரை நோக்கி எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதோடு, எதிலும் துரதிர்ஷ்டத்தை தான் கொண்டு வரும்
சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்கள் தரையில் சிதறி இருந்தால், அதை காலால் மிதித்தால், அது மிகப்பெரிய அமங்கலமான செயலாக கருதப்படுகிறது.
ஒரு சுப காரியத்தில் ஈடுபடும் போது, நாய் வந்து உங்களைத் தொட்டால், அது கெட்ட சகுணமாக நாரத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இச்செயல் வாழ்வில் வறுமையை வரவழைக்கும்.
வீட்டைப் பெருக்கி, துடைக்கும் போது, அந்த அழுக்கு நீர் மேலே படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அந்நீர் நம் உடலில் பட்டால், அது துரதிர்ஷ்டத்தை வரவழைக்குமாம்.
இறந்த சடலத்தை தொட்ட பின், ஒருவர் தவறாமல் குளித்துவிட வேண்டும். இல்லாவிட்டால், அது அவரது வீட்டிற்கு முடிவற்ற துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்.
சுடுகாட்டில் உள்ள மரக்கட்டைகளைத் தொடுவதும் அபசகுணமான செயல் தான். இதைச் செய்யும் போது, அது எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, பின் எதிலும் தோல்வியைத் தழுவச் செய்யும்.