புதுச்சேரியில் திருமணமான மூன்று மாதத்தில் இளம் பெண் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் மூலக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன். இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் புவனேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் கடந்த சில தினங்களாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் புவனேஸ்வரி தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர் அங்கிருந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் மறுநாள் காலை திடீரென புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரியின் பெற்றோர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தன் மகளை அவரின் கணவர் லோகஸ்வரன் மற்றும் மாமியார் கஸ்தூரி ஆகியோர் தான் தற்கொலைக்கு தூண்டியுள்ளனர் என்று கூறி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.