நயன்தாராவிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் தன்னுடைய பட புரொமோஷனுக்கு கலந்து கொள்ளாதது தான். அவர் நடிக்கும் படங்கள் ஆஹா ஓஹோ என்று ஓடினாலும், தயாரிப்பாளர்களுக்கு அவர் புரொமோஷனுக்கு வருவதில்லை என்பது சின்ன வருத்தம்.
தற்போது நயன்தாரா நடித்திருக்கும் டோரா படம் இம்மாதம் 31ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை வெளியிடும் ஆரா சினிமாஸ், படத்தில் இடம்பெறும் காரை போன்று சில கார்களை பெரிய மாலில் வைத்துள்ளார்களாம். அந்த காருடன் ரசிகர்கள் தனித்தனியாக செல்பி எடுத்து இந்த ஆரா நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கலாம்.
அப்படி புகைப்படங்கள் அனுப்புபவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அந்த காருடன் நயன்தாராவுடன் இணைந்து புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைக்குமாம். இதனால் ரசிகர்கள் நயன்தாராவை பார்க்கப்போகும் ஆசையில் போட்டிபோட்டு புகைப்படம் எடுத்து வருகின்றனர்.