நொச்சி ஒரு சிறந்த கொசுவிரட்டி. நொச்சி இலைகளை புகை போட்டால் கொசு அருகில் வரவே வராது.
நொச்சி கிராம பகுதிகளில் ஏராளமாக வளர்ந்து கிடக்கும் ஒரு செடி. இந்த நொச்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
கிராமங்களில் தானியங்களை மூட்டைகளில் கட்டியோ அல்லது குருதுகளில் (சேமிப்புக்கலன்) சேமித்தோ வைப்பார்கள்.
அவ்வாறு வைக்கும்போது தானியங்களுடன் நொச்ச இலைகளை வைத்துவிடுவார்கள். நொச்சி பூச்சிகள்,வண்டுகள் தாக்கத்தில் இருந்து தானியங்களை பாதுகாக்கும்.
நொச்சி இலை சாற்றுடன் சிறிது மிளகுத்தூள், நெய் நேர்த்து சாப்பிட்டு வர இடுப்பு வலி, மூட்டு வலி குணமாகும்.
காய்ச்சல் வந்து ஓய்ந்தவர்கள் நொச்சி இலை போட்ட வெதுவெதுப்பான நீரில் குளித்தால் கிருமித் தொற்றுகள் அகன்று புத்துணர்ச்சி பெறுவார்கள். காய்ந்த நொச்சி இலைகளை எடுத்து சாம்பிராணி போடுவது போல ந்த புகை சுவாசிக்க சளி அடைப்பு நீக்குவதுடன் தலைவலியும் நீங்கும்.
நாள்பட்ட புண்களில் கிருமித்தொற்று அதிகமாக இருக்கும். அந்த புண்களின் மீது நொச்சி இலை சாற்றை விட்டு வர கிருமித்தொற்று நீங்கி புண் காயத் தொடங்கும்.