Loading...
நமது உடல் நலத்திற்கு நம்மிடம் உள்ள சாதாரண பழக்கவழக்கங்கள் கூட பாதிப்பினையும் நோய் தொற்றினையும் ஏற்படுத்துகிறது. இப்பழக்கங்கள் நம் உடல்நலத்தில் சிறிது சிறிதாக பாதிப்பினை ஏற்படுத்தி நம்மை கொல்லும் விஷமாகிறது.
Loading...
- நம்மில் பெரும்பாலானோரிடம் இருக்கும் கெட்டபழக்கம் நகம் கடித்தலாகும். நாம் நகம் கடிக்கும் போது அதில் உள்ள கிருமிகள் உடலினுள் சென்று நோய் தொற்றினை ஏற்படுத்துகிறது.
- நம் விரலில் ஏராளமான கிருமிகள், பாக்டீரியாக்களானது நிறைந்து இருக்கும். மூக்கினுள், வாயில் நாம் விரலை நுழைப்பதால் நம் கையில் உள்ள கிருமிகள் உடலினுள் எளிதாக ஊடுருவி பாதிப்பினை உண்டாக்குகிறது.
- தரம் குறைவான கண்ணாடியினை உபயோகித்து சூரியனை பார்க்கும் போது அதிலிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் நேரடியாக கண்ணின் கருவிழியினை தாக்கி காட்ராக்ட், பார்வை குறைபாடு, சில சமயங்களில் புற்றுநோயினை கூட ஏற்படுத்தும்.
- கால்மேல் கால் போட்டு அமர்வதனால் இரத்தநாளங்களில் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் உயர்மனஅழுத்தம், நரம்பு சிதைவும் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகும்.
- கொழுப்பு நீக்கப்பட்ட பாலினை அருந்துவதால் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
- நகரத்தில் உள்ள பறவைகள் நோய் பரப்பும்தன்மை கொண்டவை. அதனால் அவற்றிற்கு உணவளிக்கும் போது கையிலோ அல்லது நமது அருகிலோ கொடுக்காமல் தனியாக பாத்திரத்தில் வைக்கலாம்.
- உச்சி முதல் உள்ளங்கால் வரை போர்த்தி கொண்டு தூங்கும் போது கார்பன் டை ஆக்ஸைடின் அளவானது அதிகரித்து மூளைக்கு பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
- தொடர்ந்து ஹெட் போனை உபயோகிப்பதால் நோய்தொற்று ஏற்படுவது மட்டுமல்லாது, காது கேட்கும் திறனும் குறைகிறது.
- அதிக எடையுள்ள பையினை நாம் சுமந்து செல்லும்போது நமக்கு தோல்வலி, முதுகு வலி ஏற்படுகிறது.
- அதிக உயரமுள்ள ஹீல் செருப்புகளை அணியும் போது, குதிகாலில் எலும்பு முறிவானது ஏற்படுகிறது.
- காலை உணவானது ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். இதனை தவிர்க்கும் போது உடல் ஆற்றலை குறைத்து, உடல் எடையினை அதிகரிக்க செய்கிறது.
- மேக்கப் உடன் நாம் தூங்கும் போது நமது சருமத்தினை பாதிக்கிறது. நாம் கண்களில் போடும் மை, மஸ்காராவில் உள்ள கெமிக்கல்கள் கண்ணினை பாதித்து பார்வையினை குறைக்கிறது.
Loading...