Loading...
ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது முத்தையா இயக்கத்தில் சசிகுமார், ஜோடியாக ஹன்சிகா நடிக்கும் கொடிவீரன் படத்தில், சசிகுமாரின் தங்கையாக நடிக்கிறார். இது பற்றி கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்…
“நான் எப்போதுமே ஒரு படத்தில் நடிக்கும் போது அதில் யார் ஹீரோ, எத்தனை நாயகிகள் என்று பார்ப்பது இல்லை. கதையில் எனது பங்கு என்ன என்பதை மட்டுமே பார்க்கிறேன்.
Loading...
அந்த வகையில் ‘கொடிவீரன்’ படத்தில் எனக்கு தங்கை வேடம் என்றாலும் அழுத்தமான வேடம். கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடம். ‘காக்காமுட்டை’ படத்தில் எப்படி எனது அம்மா வேடம் பேச வைத்ததோ, அது போல் இந்த தங்கை வேடமும் என்னை பற்றி பேசவைக்கும் வகையில் இருக்கும். எனவே, சசிகுமாருக்கு தங்கையானதும் மகிழ்ச்சி தான்” என்றார்.
Loading...