முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திப்பதற்காக சீன இளவரசி ஒருவர் இலங்கை வந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மஹிந்த விடுத்த அழைப்பினை அடுத்து தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இலங்கை வந்த இளவரசி கடந்த திங்கட்கிழமை விஜயராமயில் அமைந்துள்ள மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.
சீனாவின் பியுஜேன் பிராந்தியத்தின் அரச இளவரசியான ஷு ஷி யென் என்பவரே இவ்வாறு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அவர் கோட்டை இராசதானியில் ஆட்சி செய்த பராக்கிரமபாகு அரசரின் உறவினர் என தெரிவிக்கப்படுகின்றது.
பராக்ரமபாகு அரசரின் ஒரு மகன் அப்போதைய காலப்பகுதியில் சீனா நோக்கி சென்றுள்ளார். எனினும் சீனாவின் வேண்டுகோளுக்கு அமைய அவர் சீனாவில் குடியேறியுள்ளார்.
இளவரசி ஷு ஷி யென் அந்த அரச குடும்பத்தின், 12வது பரம்பரயை சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதியை சந்தித்த இளவரசி, “தாங்கள் தற்போது மகிழ்ச்சியாக, சுதந்திரமாக இருக்கின்றீர்களா?” என புன்னகையுடன் வினவியுள்ளார்.
“என்ன சுதந்திரம், இந்த அரசாங்கம் செய்யும் வேலைகளினால் எனக்கு இருந்த சுதந்திரமும் இல்லாமல் போய்விட்டது.” என மஹிந்த சிரித்த முகத்துடன் தெரிவித்துள்ளார்.
ஏன் அப்படி? என ஷு ஷி யென் வினவியுள்ளார்.
அரசாங்கம் செய்யும் தவறான முடிவுகள் மக்களையே பாதிக்கின்றது. மக்கள் மிகவும், கஷ்டத்துடனே வாழ்கின்றார்கள். நாடும் உலகமும் ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாடு இன்மும் அழிந்து கொண்டிருக்கும் நிலையில் எப்படி சுதந்திரமாக இருப்பது? என மஹிந்த அதற்கு பதிலளித்துள்ளார்.