தான் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக நாடகமாடிய பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்ஸசில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
18 வயதான பீரியான ஹார்மன் டெல்பொட் என்ற பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் காணாமல் போயுள்ளதாக அவரது நண்பர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும் பின்னர் அவர் காயங்களுடன், இரத்தம் தோய்ந்த நிலையில் அரை நிர்வாணமாக தேவாலயமொன்றிற்கு வந்துள்ளார்.
தான் மூன்று ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞர்களால் கடத்தப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
பின்னர் விசாரணைகளின் போது எவ்வித தடயமும் கண்டுபிடிக்கப்படவில்லை, மேலும் மருத்துவ பரிசோதனைகளின் போதும் அவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளமைக்கான எவ்வித ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
எனவே இதனைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணைகளின் போது அப்பெண் தான் நாடகமாடியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
காயங்களையும் அவரே ஏற்படுத்திக்கொண்டுள்ளார். இதனையடுத்து அப்பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.