இரகசிய கூலிப்படைகளை உருவாக்க இராணுவத்திற்கு முடியும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும், அது குறித்து இராணுவத் தளபதி அறிந்து வைத்திருப்பது அவசியம் என்பதோடு, அந்தப் படை சார்ந்த எழுத்து மூலமான ஆவணங்கள் இராணுவத் தலைமையகத்தில் பேணப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தான் பதவிவகித்த காலத்தில் அப்படிப்பட்ட கூலிப்படைகளை இயக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆட்சியில் இரகசிய கூலிப்படைகளை வைத்து பலரை வெள்ளை வானில் கடத்திக் கொலை செய்யப்பட்டதாக முன்னாள் முப்படைத் தளபதியும், நல்லாட்சி அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்கோ அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.