நடிகர் விஜய் எந்த சூழ்நிலையிலும் அரசியலுக்கு வரமாட்டார் என அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் தனியார் கல்லுரி நிகழ்வில் கலந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டியில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அரசியலில் அதிக ஆர்வம் இருந்தது.
என் மகன் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என நான் நினைத்தது உண்மை தான்.
ஆனால் காலப்போக்கில் அரசியல் ஒரு சாக்கடை தான், அதனை சுத்தம் செய்ய முடியாது என உணர்ந்து கொண்டேன்.
எனவே அதிலிருந்து ஒதுங்கிவிட்டேன், இனிமேல் எந்த சூழ்நிலையிலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வரமாட்டார் என தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய பாடல்களுக்கு இளையராஜா ராயல்டி கேட்பது நியாயமற்ற பேச்சு என்றும், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தகுதியானவர்கள் நிர்வாகிகளாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.