Loading...
கசப்பாக இருக்கும் வெந்தயத்தில் புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
Loading...
எனவே இந்த வெந்தயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.
வெந்தயத்தின் மருத்துவ நன்மைகள்
- தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதுடன், நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.
- வெந்தயம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது. எனவே இது மாரடைப்பினால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுவதைத் தடுத்து, இதயத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்குகிறது.
- வெந்தயம் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவதாக ஆய்வு கூறுகிறது. எனவே வெந்தயத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
- பெண்கள் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புக்களைத் தடுத்து, வலி நிவாரணியாகப் பயன்படுகிறது.
- தினமும் காலையில் வெந்தயத்தை சாப்பிடுவதால், கோடைக்காலத்தில் அதிகப்படியான உடல் சூடு ஏற்படுவதை தடுக்கிறது.
- வெந்தயம் நமது உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், செரிமான கோளாறுகள், வாய்வுத் தொல்லை போன்றவை நீங்குவதோடு, மலச்சிக்கல், வயிற்று அல்சர் போன்ற பிரச்சனைகளும் தடுக்கப்படுகிறது.
Loading...