முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தேனி மாவட்டம் காமாட்சி, திருவள்ளூர் மாவட்டம் ரத்தினம், சிவகங்கை மாவட்டம் குழந்தை மற்றும் சுரேஷ், காஞ்சீபுரம் மாவட்டம் அமுதா, மணிகண்டன், திருநெல்வேலி மாவட்டம் அருமைநாயகம், ராமநாதபுரம் மாவட்டம் பீட்டர், மதன், தஞ்சாவூர் மாவட்டம் கிஷோர், கருப்பையன், கோவை மாவட்டம் விஷ்ணுகுமார் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
மதுரை மாவட்டம் பெண் காவலர் ராதிகா, முதல் நிலைக்காவலர் அய்யங்காளை, சிறப்பு உதவி ஆய்வாளர் சவுந்திரபாண்டியன், சின்னசாமி, திருச்சி தலைமைக்காவலர் கிருஷ்ணன், ஆயுதப்படை காவலர் கலைமணி, வெங்கடாசலம், அரியலூர் மாவட்டம் தலைமை காவலர் முருகானந்தம் ஆகியோர் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
மின்சாரம் தாக்கியும் மற்றும் பல்வேறு நிகழ்வுகளிலும் உயிரிழந்த மேற்கண்ட 20 பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.