அன்றுமுதல் விஜய் – சிம்புவின் நெருக்கம் அதிகமாகியுள்ளது. விஜய்யை தனது அண்ணன் என்று குறிப்பிட்டு வரும் சிம்பு, அதேவேளையில், தான் அஜித்தின் தீவிர ரசிகர் என்று ஒருபக்கம் கூறி வருகிறார். இந்நிலையில், விஜய்யும் சிம்புவும் ஒரு படத்தில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதாவது, சிம்பு ஒரு நடிகராக இல்லாமல் அவ்வப்போது நட்பு அடிப்படையில் மற்ற நடிகர்களின் படங்களுக்கு பாடலும் பாடி வருகிறார். தற்போது நண்பர் சந்தானத்துக்காக ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தில் இசையமைப்பாளராகவும் ஆகியுள்ளார். இந்நிலையில், விஜய் அடுத்தாக நடிக்கவிருக்கும் படத்திற்கு சிம்பு இசையமைக்கவுள்ளதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது.
‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் சிம்பு இசையமைக்கப்போகிறார் என்பதுதான் அந்த செய்தி. இந்த செய்தி கோலிவுட்டில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், விஜய் – சிம்பு ரசிகர்கள் இந்த செய்திக்கு உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.