சேலம் மாவட்டம் ஸ்பீட் ஸ்கேட்டிங் அசோசியேஷனில் உள்ள ஜோஸ் குயின் கிளப்பில் பயிலும் மாணவி ஏ.பி.நேத்திரா. சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஏ.பி.நேத்திரா 2016-17 ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆண்டில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கான தேர்வில் 4-வயதுக்குட்பட்ட பிரிவில் கலந்துகொண்டு இரண்டு தங்கப்பதக்கங்களையும் பெற்று, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதில் வென்றதன் மூலம் மே மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள ‘ஏசியன் ரோலர் ஸ்போர்ட்ஸ் சர்வதேச போட்டி 2017’ ல் மாணவிகளுக்கான பிரிவில் இந்திய அளவில் மூன்றரை வயதுள்ள ஏ.பி.நேத்திரா கலந்துகொள்ள உள்ளார். அம்மாணவியை நடிகர் விஜய்யிடம் காண்பித்து அவரின் பாராட்டையும், ஊக்குவிப்பையும் பெற ஆசைப்பட்டனர்.
இதையறிந்த விஜய், நேத்திரா மற்றும் தமிழ்நாடு ஸ்கேட்டிங் அசோசியேஷன் உறுப்பினர்கள், கிளப் உறுப்பினர்களையும், மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களையும் நேரில் அழைத்து மனமார பாராட்டி, அவர்களுடன் புகைப்படம் எடுத்து ஊக்குவித்தார்.