Loading...
மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துவரும் இப்படத்தில் சமூக பிரச்சனை மையமாக பேசப்படுகிறது என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிகை சினேகாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக அவர் எடை குறைத்து வருகிறாராம். இதுபற்றி அவர், படத்திற்காக நான் எடையை 10 கிலோ வரை குறைக்க வேண்டும்.
Loading...
ஏற்கனவே 7 கிலோ குறைத்துவிட்டேன், மீதமுள்ளதை குறைக்க முயற்சி செய்து வருகிறேன். என் கதாபாத்திரம் ஒல்லியாக இருக்கும் என்று இயக்குனர் கூறியதால் எடையை குறைத்து வருவதாக கூறியுள்ளார்.
ஆனால் சினேகாவின் சில ரசிகர்கள் அவர் கொஞ்சம் பப்ளியாக இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.
Loading...