நடிகர் தனுஷின் வளர்ச்சி இன்று நாடறிந்தது. அவரது பர்சனல் வாழ்கையும் சரி திரையுலக வாழ்கையும் சரி எந்தவித
பிரச்சினையும் இல்லாமல் சீராக போய்க்கொண்டிருக்கிறது. அவரது அண்ணன், மனைவி, மாமனார் என எல்லோருமே சினிமாவில் ஜொலிக்கும் பிரபலங்கள்.
அப்படி இருக்கும்போது கடந்த சில வருடங்களாகவே சிவகங்கையை சேர்ந்த ஒரு தம்பதியினர் தனுஷ் எங்களுடைய மகன் என கூறி வருகிறார்கள். அதுபோக போலீஸாரிடமும் புகார் கொடுத்துள்ளார்கள். இதைதொடர்ந்து நடிகர் தனுஷ், மதுரை நீதிமன்றத்தில் கடந்த மாதம் தனது பெற்றோர்களுடன் ஆஜரானார்.
இந்த வழக்கு தொடர்பான மருத்துவ அறிக்கை அண்மையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சமர்பிக்கப்பட்டது. அதில் தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலமாக அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது. இது இவ்வழக்கின் மிகப்பெரிய திருப்பமாகவும் பார்க்கப்பட்டது மேலும் இதுதொடர்பான விரிவான விசாரணை நாளை மார்ச் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிறுவயதில் ஓடிப்போன சிவகங்கையை சேர்ந்த அந்த தம்பதியினர் உண்மையான மகன் தற்போது மீண்டும் அவர்கள் பெற்றோர்களிடமே வந்துவிட்டாராம். இதனால் இந்த வழக்கு ஒருவழியாக முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.