இன்று பெண்களைப் போல ஆண்களும் தங்கள் தலைமுடியைக் காப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆண்களுக்கும், பெண்களுக்கும் முடி உதிர்தல், இளநரை, செம்பட்டை நிறமாக முடி மாறுதல், கருமை மங்குதல் என்பன போன்ற பிரச்சினைகள் உள்ளன. இவற்றுக்கு என்ன செய்வதென்று தடுமாறுபவர்களுக்கு சில ஆலோசனைகள்….
எடுங்கள் வேப்பிலையை
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேக வைத்து ஒருநாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து, காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி, தலையில் தேய்த்துக் குளித்துவர முடி உதிர்வது நிற்கும்.நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும், புழுவெட்டும் மறையும்…!
முடி உதிர்வைத் தடுக்க சில வழிகள்
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்துக்குப் பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.முடி உதிர்ந்த பகுதிகளில் முடி வளர கீழா நெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் பலனிருக்கும்.முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
கரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
இளநரை பறக்க வேண்டுமா?
இளநரை கருப்பாக, நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம். முடி கருப்பாக, ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்திப் பூ இடித்துத் தூள் செய்து, தேங்காய் எண்ணையில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வரவேண்டும். நரை போக்க தாமரைப் பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால் நரை மாறிவிடும். செம்பட்டை முடி நிறம் மாற, மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்துத்தலைக்குத் தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
கைவைத்தியத்தால் கருமையாகும் முடி
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி, தேங்காய் எண்ணையுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டிதேய்த்து வந்தால் முடி கருமையாகும்.தலைமுடி கருமை, மினுமினுப்புப் பெற அதிமதுரம் 20 கிராம் அளவை, 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊற வைத்து, 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.முடிகொட்டிய இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு நன்றாக அரைத்துத் தடவிவர வேண்டும்.