சமுத்திரக்கனி தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்த படம் அப்பா. படத்தை பார்த்தவர்கள் நமக்கு இப்படி ஒரு அப்பா கிடைக்கவில்லையே ஏன் ஏங்கும்படி நடித்திருந்தார் சமுத்திரக்கனி. இந்நிலையில் அவர் அப்பா படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்கிறார். சமுத்திரக்கனி இயக்கும் முதல் மலையாள படமான இதற்கு ஆகாச மிட்டாயீ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஜெயராம்
மலையாளத்தில் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளார். இது வரலட்சுமி நடிக்கும் இரண்டாவது மலையாள படம் ஆகும்.
வரலட்சுமி
இது குடும்ப படம். நான் ஜெயராம் சாரின் மனைவியாக நடிக்கிறேன். நான் ஜெயராம் சாரின் தீவிர ரசிகை. அவருடன் சேர்ந்து நடிப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் வரலட்சுமி.
சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி சார் அண்மையில் தான் இந்த படத்தில் நடிக்க கேட்டார். யோசிக்காமல் சரி என்று கூறினேன். அவர் படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
கதை
சமுத்திரக்கனி சார் இயக்கத்தில் நடிக்க ஆவலாக உள்ளேன். மலையாள ரசிகர்களுக்கு ஏற்ப கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார் சமுத்திரக்கனி சார். ஏப்ரல் 1ம் தேதி முதல் நான் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன் என வரலட்சுமி கூறியுள்ளார்.