நுவரெலியா கிரகறி குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் மரணத்திற்கான காரணம் தற்கொலை என தெரியவந்துள்ளது.
மாகஸ்தோட்டை சந்தி பகுதியை சேர்ந்த 16 வயதான ஹாசினி சுலோச்சனா என்ற யுவதியே நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த யுவதி கிரகறி குளத்தில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி கடிதம் ஒன்றை எழுதி வீட்டில் வைத்து விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் தொடர்பாக ஆரம்ப நீதவான் விசாரணைகளின் பின்னர், பிரேதப் பரிசோதனைகள் நுவரெலியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.