Loading...
தேவி’ படத்திற்கு பிறகு தமிழில் பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ‘யங் மங் சங்’. இப்படத்தை ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய அர்ஜுன் இயக்குகிறார். கதாநாயகியாக லட்சுமிமேனன் நடிக்கிறார்.
தங்கர் பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, காளி வெங்கட், ‘பாகுபலி காலக்கேயா’ பிரபாகர், கும்கி அஸ்வின், இயக்குனர் சி.எச்.நாராயண மூர்த்தி, ஒளிப்பதிவாளர் ரவீந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் சித்ரா லட்சுமணனும் நடிக்கிறார். இப்படத்தில் லட்சுமிமேனனின் அப்பாவாக இவர் நடிக்கிறார்.
Loading...
சித்ரா லட்சுமணன் ஏற்கெனவே ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் நயன்தாராவின் அப்பாவாக நடித்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் இசையமைக்கிறார். கடந்த பதினைந்து நாட்களாக கும்பகோணம் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்தை வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன்-கே.எஸ்.சிவராமன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
Loading...