நயன்தாரா நடிப்பில் உருவான ‘டோரா’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதில் நயன்தாராவை சுற்றியே கதை நகர்கிறது. சென்சார், இதற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது. இந்த படத்தில் நயன்தாராவுடன் நடித்த ஹரிஷ் உத்தமன் தனது அனுபவத்தை கூறும் போது…
“நயன்தாரா படத்தில் நடிக்கும் போது, தனது காட்சி முடிந்ததும் கேரவனுக்குள் சென்று ஓய்வு எடுக்க மாட்டார். செட்டில் மற்றவர்கள் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருப்பார்.
படப்பிடிப்பு தாமதமானால் அவர் கோபப்படமாட்டார். பொறுமையாக காத்திருப்பார். படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வருவதை பழக்கமாக வைத்திருக்கிறார். இது போன்ற காரணங்களால் தான் நயன்தாராவை அனைவரும் புகழ்கிறார்கள்” என்றார்.
டோரா படத்தின் இயக்குனர் தாஸ் ராமசாமி, “பெரிய நடிகை என்ற பந்தா இல்லாமல் நயன்தாரா சொன்னபடி காட்சிகளை நடித்துக் கொடுத்தார்” என்று புகழ்ந்தார்.