Loading...
இராணுவத்தினரின் கையில் கொடுத்த தமது பிள்ளைகள் தொடர்பாக விசாரணைக்காகச் செல்லும் பெற்றோரிடம் உங்கள் பிள்ளைகளை இராணுவத்தினரிடம் கொடுத்ததற்கான சாட்சிகள் உள்ளதா? என இராணுவத்தினர் தம்மிடம் கேட்பதாக காணாமல்போன உறவுகளின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
இறுதி யுத்தம் நிறைவடைந்த நிலையில் இராணுவத்தின் கையில் கொடுத்து விட்டே தாம் நலன்புரி நிலையங்களுக்கு சென்று தமது பிள்ளைகள் வருவார்கள் என காத்திருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Loading...
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் காணாமல்போனோர் உறவுகளின் போராட்டம் எந்தவொரு தீர்வுமின்றி இருபத்தொரு நாளாக தொடர்ந்துகொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...