வயது முதிர்வதை தடுப்பதற்காக புதிய மருந்தொன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய மருந்தின் ஊடாக பாதிக்கப்பட்ட டி.என்.ஏ மூலக்கூறுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதுடன், செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் நாசா விண்வெளி ஆராச்சியாளர்கள், சூரிய கதிர்வீச்சில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் எனவும் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட டி.என்.ஏ மூலக்கூறுகள் இந்த மருந்தின் ஊடாக நேரடியாக புதுபிக்க முடியும் எனவும் தெரியவந்துள்ளது.
6 மாத காலங்களுக்கு இந்த மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து ஆய்வு செய்யப்படவுள்ளதுடன், அது வெற்றியளித்தால் 3 வருட காலப்பகுதியில் இந்த புதிய மருந்தை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாசாவின் அவதானம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் பிரகம் மற்றும் போஸ்டனில் அமைந்துள்ள மகளீர் மருத்துவமனைகளில் மனிதர்களை பயன்படுத்தி இந்த புதிய கண்டுபிடிப்பு ஆய்வு செய்யப்படவுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளனர்.