ராஜபக்ச அரசின் போது பாதுகாப்புச் செயலாளராகவிருந்த கோத்தபாய ராஜபக்ச தனக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளுமாறு சர்வதேச ஊடகங்களுக்கு சட்டத்தரணிகள் ஊடாக கடிதங்கள் அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அப்போதைய அரசுக்கெதிராக கருத்துக்களை கொண்டிருந்தவர்களை அடக்கி வைக்கும் பொருட்டு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இரகசிய படைப்பிரிவொன்றை பேணி வந்ததாக ஏ.எப்.பி. நிறுவனம் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
இதை தொடர்ந்து அல்ஜசீரா நிறுவனமும் விசேட நிகழ்ச்சி தொகுப்பொன்றை அண்மையில் ஒளிபரப்பியிருந்தது.
இந்த செய்திகள் யாவும் உண்மைக்கு புறம்பானதும், தவறான ஆதாரங்களின் அடிப்படையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் கோத்தபாய ராஜபக்ச தனது சட்டத்தரணிகள் ஊடாக குறித்த செய்தி நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தன்னைப் பற்றிய தவறான செய்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தை திருத்தி ஒளிபரப்பும் போதும் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்புமாறு குறித்த கடிதங்களில் கோரப்பட்டுள்ளது.
கோத்தபாய ராஜபக்சவின் சார்பில் அவரது சட்டத்தரணி சனத் விஜேவர்த்தன சட்ட நிறுவனம் குறித்த கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.