அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தி ஒன்பது கோடி ரூபாவுக்கு மேல் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவங்ச சிறையில் உணவை தவிர்த்து வருகிறார்.
உயிரை மாய்த்து கொள்ளும் நோக்கில் அவர் உணவு தவிர்ப்பை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இதற்கு பல வருடங்களுக்கு முன்னர் விமல் வீரவங்ச, தவறான சம்பவம் ஒன்றில் சிக்கி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதுடன் அது குறித்து தனது கைப்பட எழுதி மனைவி சஷி வீரவங்சவுக்கு அனுப்பிய கடிதம் ஒன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
அன்புள்ள சஷி,
என்னை மன்னித்துக்கொள்..? வாழ்க்கையை திருத்திக்கொண்டு முன்னோக்கி செல்ல எனக்கு நீ அனுமதி தருவதில்லை என்பதால், தொடர்ந்தும் வாழ்வதற்கு எனக்கு எண்ணமில்லை. என்னை மன்னித்துக்கொள்..!
உனது எதிர்காலம் சிறந்ததாக அமையட்டும். எனக்காக எனது பிள்ளைகளை நன்றாக கவனித்துக்கொள். மகனை நான் மிகவும் நேசிக்கின்றேன். நான் வாழ்ந்தது போதும். எனக்கு துயரமாக இருக்கின்றது.
எனினும் செய்வதற்கு எதுவுமில்லை.என்னை மன்னித்துக்கொள்..!.
இப்படிக்கு
கம் விமல் வீரவங்ச
முன்னர் விமலசிறி கம்லத் என்ற தனது பெயராக பயன்படுத்தி வந்ததால் ”கம்“ என இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
பிறிதொரு பெண்ணுடன் இருந்த தொடர்பை மனைவி அறிந்து கொண்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் வீரவங்ச தற்கொலை செய்ய முயற்சித்ததாக சிங்கள இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த கடிதத்தின் மூலம் மன்னிக்க முடியாத குற்றத்தை செய்துள்ளதாக வீரவங்சவே ஒப்புக்கொண்டுள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வீரவங்சவின் இந்த கடிதம் கிடைத்ததை அடுத்து சஷி வீரவங்க, அப்போது மக்கள் விடுதலை முன்னணிக்கு கடிதத்தை தொலைநகல் மூலம் அனுப்பி வைத்திருந்தார்.
முன்னணியின் தலைவர்கள் வீரவங்சவின் வீட்டுக்குச் சென்று அவரை தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
விமல் வீரவங்சவும் அவரது மனைவியும் அப்போது கம்பஹா மாவட்டத்தின் மாரமண்டிய என்ற பிரதேசத்தில் தொலைத் தொடர்பு நிலையம் ஒன்றை நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.