மீன்பிடி, நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தனது அதிகாரங்களில் சிலவற்றை வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ராஜாங்க அமைச்சர் திலிப்வெத ஆரச்சிக்கு பகிர்ந்தளித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் ராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சிக்கு தனது அதிகாரங்களில் சிலவற்றை அமைச்சர் மஹிந்த அமரவீர பகிர்ந்தளித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின்போது மீன்பிடி அமைச்சிற்கு மேலும்சில பொறுப்புகள் புதிதாக இணைக்கப்படவுள்ளது.
தற்போதைக்கு சூழல் அமைச்சின் கீழ் உள்ள கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் உள்ள சமுத்திரவியல் பல்கலைக்கழகம் என்பன அவற்றுள் முக்கியமானவையாகும்.