தனுஷ் நடிப்பில் வெளியான `3′ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதே படத்தில் வெளியான “ஒய் திஸ் கொலவெறி” என்ற பாடலின் மூலம் உலகளவிலும் பிரபலமானார். அதனைத்தொடர்ந்து விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
மேலும், நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததாக இவரது புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அதுமட்டுமல்லாமல் சிம்புவுடன் இணைந்து பீப் பாடல் சர்ச்சையிலும் சிக்கித் தவித்தார். இந்நிலையில், இவரது சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரது குடும்பத்தினர் அனிருத்துக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது.
சென்னையில் நகைக்கடை வைத்திருக்கும் பிரபல தொழிலதிபரின் மகளை அனிருத்துக்கு திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல்களை தொடர்ந்து, இதுகுறித்து அனிருத்திடம் கேட்டபோது, அவர் சிரித்துவிட்டு, அந்த தகவல் உண்மையல்ல என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் உடனடி திருமணம் குறித்து தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
அனிருத் தற்போது அஜித்தின் `விவேகம்’, சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’, சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.