சிவகார்த்திகேயன் அந்த டிவியோட கம்பெனி ஆர்ட்டிஸ்ட் போல. எங்களால தானே வளர்ந்தார் வளர்ந்தாருன்னு அவங்க ப்ரொமோட் பண்ணனும்ன்னு நினைக்கிற நிகழ்ச்சிகளுக்கெல்லாம் கூப்பிடுவாங்க. இவரும் எதுக்கும் இருக்கட்டுமேன்னு, ஓடி ஓடி வருவார்.
இப்போது அந்த டிவி, பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, தன் பெயரில் நடத்தி வரும்’ காபி வித் டிடி’ ஷோவுக்கு பெயர் மாற்றம் பண்றாங்க.அதுக்கு ப்ரோமோஷன் எல்லாம் போய்கிட்டு இருக்கு.
‘அன்புடன் டிடி’ என்று பேரை மாற்றிய அந்த ஷோவோட முதல் கெஸ்ட் வேற யார்? நம்ம சிவகார்த்திகேயன் தான்.
நேற்று ஷூட்டிங் நடந்தது.
அதில் எடுத்த செல்பியை சிவகார்த்திகேயன் தன் டிவிட்டரில் போட்டு, ‘ செல்பியே எடுக்கமாட்டேன். ஆனா, டிடி யோட ஒரு செல்பி எடுக்க தோணுச்சு’ன்னு ஒரு ட்வீட்டை இரவு 11 மணி வாக்கில் போட, அடுத்த ஒரு மணி நேரத்தில் டிடி ,’தேங்க்யூ உடன்பிறப்பே, சிவகார்த்திகேயன் அன்பை பரப்ப வருகிறார்’ ன்னு பதில் தந்துள்ளார்.