வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் நலம் விசாரிப்பதற்காக வரும் நபர்களை மட்டுப்படுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நேற்றைய தினம் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அதிகமானோர் வருகைத்தந்தமையே இந்த தீர்மானித்திற்கு காரணம் என சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய குடும்ப உறுப்பினர்கள் மூவர் மாத்திரமே காலை 8 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு செல்ல முடியும்.
எப்படியிருப்பினும் நாடாளுமன்ற சிறப்புரிமை பெற்றுள்ள உறுப்பினர்கள் விமல் வீரவன்சவை பார்வையிடுவதற்கு வருகைத்தர முடியும்.
அவர்கள் காலை 8.30 மணியில் இருந்து மாலை 5 மணிவரை விமல் வீரவன்சவை பார்வையிட முடியும் என பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.