நடிகர் அஜித் பற்றி இரண்டு வார்த்தைகள் சொல்லுங்களேன் என்று கேட்டால் அவருடன் பணியாற்றியவர்கள் அவ்வளவு சொல்வார்கள். பலரும் அவர் மீது மதிப்பு மரியாதை வைத்துள்ளதற்கு காரணம் பல உண்டு.
நயன்தாராவை பொறுத்தவரை ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. இதில் அவர் உறுதியாக இருப்பதால் அஜித்தை அவர் பின்பற்றுகிறார் என செய்திகள் வந்தது.
சம்பளம், கதை விசயத்தில் நயன் கறார் என்கிறார்களே ஆனால் அவரை பொறுத்தவரை இயக்குனர் எதிர்பார்ப்பதை விட கூடுதலாக நடித்து அசத்திவிடுவாராம்.
அதே போல ஷூட்டிங்க்கு சரியான நேரத்திற்கு வந்து விடுவாராம். படப்பிடிப்பு லேட்டானால் கூட அவர் அங்கேயே பொறுமையாக காத்திருப்பாராம், கோபப்படமாட்டாராம்.
தன்னுடைய காட்சிகள் முடிந்ததும் உடனே கேரவனுக்குள் போய் உட்காராமல் ஸ்பாட்டிலிருந்து எல்லாவற்றையும் கவனிப்பாராம். இது போல தான் அஜித்தும். டோரா படத்தின் இயக்குனர் தாஸ் ராமசாமி நயன்தாராவை பற்றி இவ்வளவு கூறியுள்ளார்.