Loading...
வீட்டில் நோய் கிருமிகளின் தாக்கம் ஏற்படாமல் இருக்க தினமும் பயன்படுத்தும் பாத்ரூமை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
அந்த வகையில் ஒரே நிமிடத்தில் பாத்ரூம் டைல்ஸில் படிந்திருக்கும் கறையை நீக்கி, பளிச்சிட செய்வதற்கு, சூப்பரான வழி இதோ!
தேவையான பொருட்கள்
- ஒயிட் வினீகர் – 1 கப்
- லிக்கியூட் சோப் – 1 கப்
- துடைக்கும் துணி – 1
- ஸ்ப்ரே பாட்டில் – 1
செயற்முறை
முதலில் வினிகரை மூன்று நிமிடங்கள் சூடு செய்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
Loading...
பின் சூடு செய்த 1 கப் வினிகருடன், 1 கப் லிக்கியூட் சோப்பு ஆகிய இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அதன் பின் இந்த வினிகர், லிக்கியூட் சோப் ஆகியவை கலந்த கலவையை பாத்ரூம் டைல்ஸ்-ல் கறைப்படிந்துள்ள இடங்களில் ஸ்ப்ரே செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்த ஒரு நிமிடம் கழித்து ஒரு துணியை வைத்து துடைத்தால், கறை முற்றிலும் நீங்கி இருப்பதைக் காணலாம்.
Loading...