நாள் முழுவதும் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிப்பது காலை உணவு தான். உடல் எடையினை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் பெரும்பாலும் காலை உணவினை தவிர்த்து விடுவர்.
இது மிக தவறு. காலை உணவினை நாம் தவிர்க்கும் போது உடல் எடையானது குறைவதற்கு பதிலாக அதிகரிக்கும்.
மேலும், காலையில் நாம் உட்கொள்ளும் சில உணவுகள் கூட நம் உடல் எடையானது அதிகரிப்பதற்கான காரணமாக அமைகிறது.
ஃப்ளேவர்டு தயிர் (flavoured curd)
சுவையூட்டிகள் அதிகமாக சேர்க்கப்பட்டு கடைகளில் கிடைக்கும் ஃப்ளேவர்டு தயிர்களை காலையில் கட்டாயமாக உண்ணக்கூடாது. அதிக அளவு சர்க்கரையானது சேர்க்கப்பட்டு இருக்கும்.
இதனை சாப்பிடும்போது உடல் எடையானது அதிகரிக்கும். இத்தயிரினை தவிர்த்து சாதாரண தயிரினையே எடுத்துகொள்ளவேண்டும்.
பழச்சாறுகள் (Juice)
காலையில் கடையில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த, சர்க்கரை, ஆசிட் நிறைந்த பழச்சாறுகளை அருந்தும்போது உடல் எடையானது அதிகரிக்கும். இதனால் இந்த பழச்சாறுகளை தவிர்த்து பழங்களை வெட்டி சாலட்டாக செய்து சாப்பிடலாம்.
பொரித்த உணவுகள் (Fried Foods)
பொரித்த உணவுகளான பூரி போன்றவற்றினை சாப்பிடும்போது வயிறு உப்பிசமாக இருக்கும். இதனால் உடல் பருமன் ஏற்படும். இதனை தவிர்க்க காலையில் போன்றவற்றினை தவிர்த்து, சப்பாத்தி போன்றவற்றினை எடுத்து கொள்ளலாம்.
எனர்ஜி பார்கள் (Energy bar)
உடலுக்கு உடனடி ஆற்றல் தரும் என நட்ஸ்கள், விதைகளை கொண்டு தயாரிக்கப்படும் எனர்ஜி பார்களை உண்பதால் உடல் எடையானது அதிகரிக்கும்.
பேன்கேக் (Pencake)
மைதா மற்றும் அதிகமான சர்க்கரை, கலோரியுள்ள பேன்கேக்கினை சாப்பிடும்போது உடல் எடையானது அதிகரிக்கும். எனவே காலை வேலையில் இதனை தவிர்ப்பது நல்லது.
அளவான காலை உணவு
எடையினை குறைக்கவேண்டும் என சரியாக காலை உணவினை எடுத்து கொள்ளலாமல் இருந்தாலும் அதிகமான பசியினால் உணர்வதால் நாளடைவில் உடல் எடையானது அதிகரிக்கும்.
ப்ளேவர்டு ஓட்ஸ் அல்லது செரில்கள்
காலையில் ஓட்ஸினை சாப்பிடுவது நன்மையினையே தரும். ஆனால் ப்ளேவர்டு ஓட்ஸினை எடுத்து கொண்டால் நன்மைக்கு பதிலாக தீமையே கிடைக்கும். இதனை தவிர்ப்பதன் மூலம் உடல் எடையினை குறைக்கலாம்.