முந்தைய காலங்களில் திருமணங்களுக்கு மட்டுமே பெண்கள் மேக்கப் போட்டு கொண்டனர். பின், திருமணம், விசேஷங்கள், பண்டிகைகள் போன்றவற்றிற்கு செல்லும்போது போட்டு கொண்டனர்.
ஆனால், தற்போது அலுவலகம் செல்லும் போது, கல்லூரிக்கு செல்லும் போது மேக்கப் போட்டு கொள்ளவது சாதாரணம் ஆகிவிட்டது. அன்று போல் மேக்கப் போடுவதற்கு பல மணி நேரங்கள் தேவையில்லை சில நிமிடங்களே போதுமானது.
முகத்தில் ஒவ்வொரு பாகத்தினையும் அழகாக காட்டுவதற்கு மஸ்காரா, கண்மை, ஐ லைனர், லிப்ஸ்டிக் போன்ற பல அழகு சாதன பொருள்கள் இருந்தாலும் பெண்கள் அதிகம் விரும்புவது லிப்ஸ்டிக்கை போட்டு கொள்வதையே.
இதனை குறித்து இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பல்கலைகழகத்தில் டாக்டர் ஜியோவ் பீட்டி என்பவர் நடத்திய ஆய்வில் பல பெண்களின் புகைப்படமானது 50 ஆண்களிடம் கொடுக்கப்பட்டது.
அவர்களின் கண் அசைவுகள் துல்லியமாக கண்காணிக்கப்பட்டது. லிப்ஸ்டிக் போட்ட பெண்களின் உதடுகளை சராசரியாக 7விநாடிகளும், கண்களை 0.95விநாடிகளும், ஹேர் ஸ்டைலை 0.85விநாடிகளும் பார்த்துள்ளனர்.
மேக்கப் போடாத பெண்களின் போட்டோக்களை பார்க்கும்போது உதடுகளை 2.2விநாடிகளும், கண்களை 2.97விநாடிகளும், மூக்கினை 2.77விநாடிகளும் கவனித்துள்ளனர்.
பிங்க் லிப்ஸ்டிக்கை விட சிவப்பு லிப்ஸ்டிக் போட்ட பெண்களின் உதடுகளையே அதிகமாக கவனித்துள்ளனர்.
சராசரியாக சிவப்பு லிப்ஸ்டிக் உதட்டை 7.3விநாடிகளும், பிங்க் லிப்ஸ்டிக்கை 6.7 விநாடிகளும் ஆண்கள் பார்த்துள்ளனர்.
இந்த ஆய்வின் மூலமாக ஐலைனர், ஐஷோடோ இவற்றினை போடுவதை விட லிப்ஸ்டிக் போடுவதே ஆண்களை அதிகமாக ஈர்ப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.