புதிதாக வீடு கட்டி குடிபுகும் போதோ அல்லது வாடகை வீட்டிற்கு செல்லும் போதோ நாம் வசிக்கப்போகும் அந்த வீட்டில் உள்ள தெய்வசக்தியினை நுழைய செய்யவேண்டும்.
இதனால் நமக்கு சகல செல்வங்களும், வெற்றியும் கிட்டும். தெய்வசக்தி நுழைய வேண்டும் என்றால் அது அங்கு எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் குறிப்பிடுகின்றனர்.
சிட்டுக்குருவி, புறா, அணில் போன்றவற்றிற்கு எல்லாம் சூசகமான, சூட்சகமான சக்தியினை அறியும் ஆற்றல் உண்டு.
புதிதாக குடிபோகும் வீட்டிற்கு தெய்வ சக்தியினை கொண்டு வரவேண்டும் என்றால் ஏதாவது ஒரு ஜீவசக்தியினை கொண்டு வரவேண்டும்.
மனிதர்களை காட்டிலும் பறவைகளிடம் இந்த ஜீவசக்தியானது அதிகமாக உள்ளது.
வீட்டு வாசலில் நெற்கதிரை கட்டி தொங்கவிடுவதால் குருவி, புறா போன்றவை அதனை உண்பதற்காக வரும். பின் அங்கேயே கூடு கட்டி குஞ்சு பொரிக்கும்.
குருவி போன்றவை கூடு கட்டினால் அதனை கலைக்கக்கூடாது. தெய்வ சக்தி கொண்டு வரும் சாதகமான சக்திகள் இவையாகும்.
இந்த பறவைகள், அணில் போன்றவை வந்துவிட்டு போனாலே நமக்கு நல்லது நடக்கும். எனவே இவற்றினை விரட்டக்கூடாது.