சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கைக்கு வரவேண்டும் என நல்லூர் முன்றல் பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில் வசிக்கும் தமிழர்களுக்கு லைக்கா நிறுவனம் சார்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை வழங்கும் நிகழ்வு ஏப்ரல் 9 ஆம் திகதி நடைபெற இருந்தது.
இந்த நிறுவனத்தின் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் அவர்களுக்கு லைக்கா நிறுவனம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ரஜினியின் இலங்கை பயணத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவர் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் உள்ள நல்லூர் முன்றலில் ரஜினிகாந்த் இலங்கைக்கு வரவேண்டும் என தமிழர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஆனால், தனது இலங்கை பயணம் ரத்து குறித்து பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் பரபரப்பாக வெளியாகி வந்தபோதிலும், ரஜினி தரப்பில் இருந்து எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
மேலும், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இலங்கையில் நடக்கும் இந்த போராட்டம் குறித்து ரஜினி தரப்பில் வேறு ஏதேனும் பதில் அளிக்கப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.