புவி வெப்பமயமாதலால் புவியின் காற்றோட்டத்தில் மாற்றமும், காலநிலையானது மாறுவதில் தாமதமும் ஏற்படுகிறது.
இதனால் பூமத்திய ரேகைக்கும், ஆர்டிக் பகுதிக்கும் இடையே நிலவும் தட்பவெப்பத்துக்கு காரணமான இந்த காற்றோட்டம், பூமியினை வட்டமாக சுற்றி ஆர்ட்டிக் பகுதியில் இருந்து வெப்பம் மற்றும் ஈரப்பதத்தினை உறிஞ்சி மற்ற பகுதியில் சேர்ப்பதால் இந்த மாற்றமானது ஏற்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து பென்சில்வேனியா பல்கலைகழக பேராசிரியர் டாக்டர் மைக்கேல் மன், கடந்த 2016-ல் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கலிபோர்னியாவில் வறட்சி ஏற்பட்டது.
அதேபோல் 2011-ல் அமெரிக்காவில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. 2010-ல் பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்பட்டது, இவை அனைத்துமே பருவமாற்றத்துக்கான கவலையை ஏற்படுத்துகின்றன என கூறியுள்ளார்.
உலகின் மற்ற பகுதிகளை காட்டிலும் ஆர்டிக் பகுதியில் வெப்பமானது அதிகரித்தும், பூமத்திய ரேகை பகுதியில் குறைந்தும் வருகிறது. இந்த மாற்றம் காற்றோட்ட நகர்வில் பாதிப்பினை உண்டாக்கும்.
கடந்த 40 ஆண்டுகாலமாகவே இந்த மாற்றமானது நிகழ்ந்து வருவதாகவும் இதனை தற்போது தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதனை தடுக்க பசுமைக் குடில் வாயுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.