Loading...
சிறுநீர கற்கள் பிரச்சனை ஏற்பட்டுவிட்டால் தாங்க முடியாத அளவில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.
இது போன்ற சிறுநீரக கற்கள் பிரச்சனை வருவதற்கு, நமது உடலில் அளவுக்கு அதிகமாக கால்சியம் சத்து தேங்குவது முக்கிய காரணமாகும்.
எனவே இயற்கையில் சிறுநீரக கற்களைக் கரைப்பதற்கு பல வழிகள் உள்ளது. அதில் உள்ள அருமையான ஒரு வழி இதோ.
Loading...
தேவையான பொருட்கள்
- வெள்ளரிக்காய் – 1
- ஆப்பிள் – 1
- முட்டைகோஸ் இலைகள் – 3
- எலுமிச்சை – 1/2
- அன்னாசிப்பழம் – 1
செய்முறை
வெள்ளரிக்காயின் கசக்கும் பகுதி மற்றும் ஆப்பிளின் நடுபகுதியை நீக்கி விட்டு, அன்னாசிப் பழத்தின் தோலை நன்கு சீவிய பின் அதை ஸ்லைஸ் போல வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் தோல் நீக்கிய எலுமிச்சையை பாதியளவு எடுத்து, அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்தால், ஜூஸ் தயார்!
குடிக்கும் முறை
இந்த ஜூஸை ஒரு நாளைக்கு ஒரு முறை என்று தொடர்ந்து குடித்து வந்தால், விரைவில் சிறுநீரக கற்கள் கரைந்து விடும்.
நன்மைகள்
- இந்த ஜூஸில் விட்டமின் A, B, B1, B2, C, E மற்றும் J போன்ற சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. எனவே இது நச்சுக்களை முற்றிலும் போக்கி, சிறுநீரக கற்களை எளிதில் கரைக்க உதவுகிறது.
- இந்த ஜூஸை தினமும் குடிப்பதால், ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
- இந்த ஜூஸை தினமும் குடிப்பதால், அது நமது உடலில் ஆன்டி-ஆக்ஸிடென்டை அதிகரித்து, உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை தடுத்து, செரிமானத்தை சீராக்கி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- இந்த ஜூஸ் உடலில் உருவாகும் புழுக்களை அழித்து, மலமிளக்க கோளாறுகளை சரி செய்து, இதயம், கல்லீரல் ஆகிய உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
Loading...