உணவுப் பழக்கம், நேரங்கெட்ட நேரத்தில் தூங்குவது, மது, புகை இது போன்ற பல காரணத்தினால் சர்க்கரை நோய்கள் ஏற்படுகிறது.
இயற்கையான ஆயுர்வேதத்தின் மூலம் சர்க்கரை நோய் வராமல் முழுமையாக தடுக்க அற்புதமான ஐடியா இதோ!
சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன?
- திடீரென உடல் எடை குறைவு
- அடிக்கடி தொண்டை வறண்டுபோகுதல்
- அளவிற்கு அதிகமாக தாகம் எடுத்தல்
- அடிக்கடி சிறு நீர் கழித்தல்
- உடல் சோர்வு. பார்வை மங்குவது, கை, கால் நடுங்குதல்
சர்க்கரை நோயை குணப்படுத்துவது எப்படி?
முதல் நாள் இரவிலே 10- 15 மாவிலைகளை எடுத்து ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதை 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி, இரவு முழுவதும் அப்படியே அந்த நீரை வைத்திருந்து அடுத்த நாள் காலையில் அந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இதர நன்மைகள்
இந்த மாவிலை நீரில் விட்டமின், என்சைம், ஆன்டி ஆக்ஸிடென்ட், மினரல் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது.
எனவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாவிலை நீரை குடித்து வந்தால், அது ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துவதுடன், இதய நோய்கள் வராமலும் தடுக்கிறது.