தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்த தேவயாணியை குறித்து அவரது கணவரும் இயக்குனரான ராஜ்குமாரன் தெரிவித்துள்ள தகவல்கள் தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
நீ வருவாய் என…, விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், திருமதி தமிழ் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராஜகுமாரன். விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்கும்போது அதில் நாயகியாக நடித்த தேவயானி மீது ராஜகுமாரனுக்கு காதல் ஏற்பட்டது.
இந்தக் காதலை தேவயானி ஏற்றுக்கொண்டாலும் அவரது தாயார் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இருவருக்கும் தற்போது 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த இயக்குனர் தனது மனைவியான தேவயானி குறித்து நெகிழ்ச்சியான சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
பேட்டியின்போது பேசிய ராஜகுமாரன் தன்னுடைய மனைவியை ‘தேவயானி மேடம்.., தேவயானி மேடம்’ என்று மட்டுமே அடிக்கடி குறிப்பிட்டுள்ளார்.
இது தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதற்காக மட்டுமில்லையாம். வீட்டில் இருக்கும்போதும் கூட தேவயானியை அவர் ‘மேடம்’ என்று தான் அழைப்பாராம்.
இது குறித்து அவர் உணர்ச்சிகரமாக பேசியபோது, ‘சார், தேவயானியை வைத்து படங்களை இயக்கியபோது அவரை மேடம் என்று தான் அழைத்தேன்.
இப்போது அவர் என்னுடைய மனைவி என்பதற்காக அந்த மரியாதையை பறித்து விடுவது நியாயமா?
பெற்றோரை எதிர்த்துக்கொண்டு என்னை நம்பி வந்த தேவயானிக்கு நான் வாழ்நாள் முழுவதும் மரியாதை கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது?
சிலர் தங்களுடைய மனைவியை வெளியில் மேடம் என குறிப்பிட்டுவிட்டு வீட்டில் அவமரியாதையாக நடத்துவார்கள். இவர்கள் எல்லாம் மனைவி தலையில் மிளகாய் அரைக்கிறார்கள்.
என் மனைவி தேவயானி மேடத்தை நான் அப்படி நடத்த மாட்டேன். என் வாழ்நாள் முழுவதும் அவரை நான் மேடம் என்று தான் அழைப்பேன்’ என ராஜகுமாரன் உணர்ச்சிப் பொங்க பேசியுள்ளார்.