நமது சருமத்தில் உள்ள செல்கள் பாதிப்படைவதால், சருமத்தில் கருமை மற்றும் சுருக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அந்த வகையில் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்கி, என்றும் இளமையாக இருப்பதற்கு, இயற்கையில் உள்ள அற்புதமான தீர்வு இதோ!
தேவையான பொருட்கள்
- முட்டையின் வெள்ளைக்கரு
- வெள்ளரிக்காய்
தயாரிக்கும் முறை
வெள்ளரிக்காயின் தோலை நீக்கி, துண்டுகளாக்கி அதை நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்திஒல் போட்டு அதனுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை
இந்த கலவையை சுருக்கமாக உள்ள முகம், கை, கால்களில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இவ்வாறு தினமும் செய்து வந்தால், சரும செல்களுக்கு போதிய புரோட்டீன் மற்றும் புத்துணர்ச்சி கிடைப்பதுடன், சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து, சரும சுருக்கத்தை தடுக்கிறது.
குறிப்பு
இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் மாயமாக மறைவதைக் காணலாம்.